இந்தியர்கள் அனைவரும் நோயற்றவர்களாக இருக்கச் செய்ய வேண்டும்.. மோடி அரசின் புதிய சபதம்..
இந்தியாவை தற்சார்பு நாடாக திகழச் செய்ய, இந்தியர்கள் அனைவரையும் நோயற்றவர்களாக இருக்கச் செய்ய வேண்டும் என்று மத்திய ஆயுஷ் துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் நடைபெற்ற ஆயுர்வேதம் மூலம் சுகாதாரப் பரிசோதனை, மேலாண்மைக்கான கூட்டு தேசிய அளவிலான திட்டத்தை அறிவித்தபோது இவ்வாறு கூறினார். இதன் மூலம் 20,000-க்கும் அதிகமான பழங்குடியின மாணவர்கள் பயனடைவார்கள். இந்த அறிவிப்பின் போது, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டாவும் உடனிருந்தார்.
பொது சுகாதார முன்முயற்சிகள் மூலம் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் உள்ள குழந்தைகளின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான கூட்டு முயற்சியை மத்திய அமைச்சர் இருவரும் இணைந்து அறிவித்தனர். பழங்குடியின மக்களின் சுகாதார தேவைகளை ஆய்வு செய்யவும், ஊட்டச்சத்து குறைபாடு, இரும்புச்சத்து குறைபாடு, ரத்தசோகை, அரிவாள் செல் நோய்கள் போன்ற முக்கியத் துறைகளில் பொது சுகாதார சேவைகளை பூர்த்தி செய்யவும், இரு அமைச்சகங்களும் இணைந்து செயல்படுகின்றன என்று ஆயுஷ் அமைச்சர் கூறினார். நாட்டின் 14 மாநிலங்களில் அடையாளம் காணப்பட்ட 55 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளில் சேர்ந்த 10-18 வயதுக்குட்பட்ட மாணவர்களை உள்ளடக்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பொதுவான சுகாதார நிலையைப் பரிசோதிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். நாட்டின் 14 மாநிலங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 55 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். ரத்த சோகை, ஹீமோகுளோபினோபதி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் காசநோய் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
Input & Image courtesy: News