குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது இஸ்ரோ! தொடங்கி வைக்க உள்ளார் பிரதமர்!

Update: 2024-02-22 09:26 GMT

வருகின்ற பிப்ரவரி 27 மற்றும் 28ஆம் தேதியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் பொழுது திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 27ஆம் தேதி நடைபெறும் என் மண் என் மக்களின் நிறைவு விழாவான பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் அன்று இரவு சூலூரில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் தங்க உள்ளார். 

இதனை அடுத்து 28ஆம் தேதி திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன் பட்டினத்தில் 2,233 ஏக்கரில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது அதற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். 

சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தங்கும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மறுநாள் தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு வந்து அங்கு குலசேகரன் பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி மற்றும் வஉசி துறைமுக விரிவாக்க பணி ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார். மேலும் இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Source : The Hindu Tamil thisai 

Similar News