பெண்களுக்கு பல்வேறு சலுகைகள், வாய்ப்புகள் அளித்தவர் நம் பிரதமர்.. மத்திய அமைச்சர் பாராட்டு..

Update: 2024-02-24 03:49 GMT

2014-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற திலிருந்து, மூத்த குடிமக்கள், பெண்கள் மீது உணர்வுப்பூர்வமான அக்கறையுடன் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியான ஓய்வூதிய சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.


புதுதில்லியில் நடைபெற்ற தன்னார்வ முகமைகளின் நிலைக்குழுவின் 33-வது கூட்டம் மற்றும் நாடு தழுவிய 10-வது ஓய்வூதிய முகாம் நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், சமூகத்தின் இந்த பிரிவினரின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக சமீபத்திய தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற இலக்கை அடைவதற்கான கொள்கைகளை வகுப்பதில் ஓய்வூதியத் துறை தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு கண்ணியமான வாழ்க்கை மற்றும் எளிதான வாழ்க்கையை உறுதி செய்கிறது என்று அவர் தெரிவித்தார்.


ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையில் பெண்களை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் குறித்து பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், விவாகரத்து பெற்ற மகள், பெற்றோர் இறப்பதற்கு முன்பு விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டால், குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். இதேபோல், தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட காணாமல் போன ஊழியர்களின் குடும்பங்கள் இப்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த 6 மாதங்களுக்குள் குடும்ப ஓய்வூதியத்தைப் பெறலாம் என்றும், 7 ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News