பொருளாதார வளர்ச்சிக்கு கூட்டுறவு துறை முக்கிய பங்கு - பிரதமர் நரேந்திர மோடி!
மத்திய அரசு நாட்டின் கூட்டுறவு துறையை வலுப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இன்று டெல்லியில் கூட்டுறவு துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து உரையாற்றினார்.
அதில், கூட்டுறவுத்துறை வளமான பொருளாதாரத்தையும் வளர்ச்சி அடைந்த கிராமங்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாயிகள் பயன் பெறுவதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கில் பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
அதோடு, நமது அரசு நாட்டின் கூட்டுறவு துறை வலுப்படுத்துவதற்கான எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை! தொடர்ந்து மத்திய அரசு கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
Source : Dinamalar