"தமிழகம் வரும் பிரதமரின் இரண்டு நாள் பயணத்தில் மாற்றம்! திட்டத்தில் சேர்ந்த மீனாட்சி அம்மன் கோவில்"

Update: 2024-02-27 09:52 GMT

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ள பாஜக மாநில தலைவரின் என் மண் என் மக்கள் நடை பயணத்தில் நிறைவு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களிடம் உரையாற்றுகிறார். பிறகு மாலை 4 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 5:15 மணிக்கு மதுரை வீரபாஞ்சான் டிவிஎஸ் லட்சுமி பள்ளியில் நடக்கும் சிறு குறுந்தொழிலாளர்கள் டிஜிட்டல் மாநாட்டில் கலந்து கொண்டு பாஜக அரசின் ஸ்டார்ட் அப் திட்டத்தால் தொழில் முனைவோரானவர்களை சந்திக்க உள்ளார். 

மேலும் மத்திய அரசின் மானியம் கடனுதவி போன்ற சலுகையால் சிறு குறுந் தொழிலாளர்கள் அடைந்த வளர்ச்சி குறித்தும் பேச உள்ளார். பிறகு இரவு 7 மணிக்கு கப்பலூர், தனக்கன்குளம், திருநகர் வழியாக பசுமலை கேட்வே ஹோட்டலுக்கு சென்று இரவு தங்கும் பிரதமர் 8 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மன் சுவாமி சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு இரவு 9:15 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜையிலும் கலந்து கொள்கிறார் பிரதமர். 

இதனை அடுத்து நாளை பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலையில் மூச்சுப் பயிற்சிக்கு பின்பு விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடியை அடைந்து குலசேகரபட்டினம் ஏவுகணை தளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் இதற்குப் பிறகு ஹெலிகாப்டர் மூலமே திருநெல்வேலி செல்லும் பிரதமர் அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பிறகு அன்று மதியம் 12:30 மணிக்கு திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார் பிரதமர். 

Source : Dinamalar 

Similar News