நிறைவு பகுதியை எட்டிய "என் மண் என் மக்கள்" - பிரதமர் வருகை! என்னென்ன ஏற்பாடுகள்!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை தமிழக முழுவதும் உள்ள 234 சட்டசபை தொகுதிக்கு நடை பயணம் மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் யாத்திரை தொடங்கப்பட்டது. இந்த யாத்திரை ராமேஸ்வரத்தில் தொடங்கி தற்போது திட்டமிட்டபடி அனைத்து தொகுதிகளையும் கடந்து நிறைவு பகுதிக்கு வந்துள்ளது. மேலும் இந்த நிறைவு பகுதி குறித்த விழா இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ளது அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். இதற்காக 1,400 ஏக்கர் பரப்பளவில்.பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு ஐந்து லட்சம் பேர் பொதுக்கூட்டத்தில் அமர்ந்து பார்க்கும் படியும் 10 லட்சம் பேர் நின்று பார்க்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதோடு 13 லட்சம் பேருக்கு உணவு பொட்டலங்களும் 25000 வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 2023 ஜூலை மாதம், புண்ணிய பூமியான ராமேஸ்வரம் மண்ணில், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களால் தொடங்கப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் பயணம் செய்து, 234 ஆவது சட்டமன்றத் தொகுதியாக, இன்றைய தினம், திருப்பூர் தெற்கு தொகுதியில், சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் அவர்கள் நினைவிடத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி, நமது நமது என் மண் என் மக்கள் நடைபயணத்தினை நிறைவு செய்திருக்கிறோம்.
சுமார் 7 மாதங்களாக, தமிழகம் முழுவதும் மக்களோடு மக்களாகப் பயணித்ததில், தமிழக மக்கள் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள், ஊழலற்ற அரசியலை எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் நேர்மையான நல்லாட்சி, தமிழகத்திலும் அமையும் என்ற நம்பிக்கையை நம் தமிழக மக்கள் மனதில் ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகிறது. நாளை நமதே! என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.