மத்திய அரசின் பி.எம்.ஶ்ரீ பள்ளி திட்டத்தை புறக்கணித்து நிதி உதவியை இழக்கும் தமிழக அரசு!
தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறையில் செயல்பாடுகளுக்கு நடப்பு நிதியாண்டிற்கு ₹44,042 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை பெரும்பாலும் ஆசிரியர், பள்ளிக்கல்வித்துறை பணியாளர்களின் ஊதியம், பென்ஷன் மற்றும் இதர சலுகைகளுக்கு செலவிடப்படுகிறது. இதனால் பள்ளிகளின் தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு மத்திய அரசு சார்பிலும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு சமக்ர சிக் ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் விதிகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். மேலும் நடப்பு நிதியாண்டில் ₹2,090.76 கோடி நிதி தமிழக அரசு வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது இதனை இரு தவணைகளாக பிரித்த மத்திய அரசு ₹1045.38 கோடியை முதல் தவணையாக கொடுத்துள்ளது. அதோடு இதன் இரண்டாவது தவணை இன்னும் நிலுவையில் உள்ளது!
ஏனென்றால் கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு நவோதயா பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது அதில் தமிழக அரசு இன்னும் இணையாமல் உள்ளது. மேலும் பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் என்ற பெயரில் தொடங்கப்பட்ட மத்திய அரசின் புது திட்டத்திலும் தமிழகம் இணையவில்லை. இதனால் நவீன கழிப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள், நீர் பாதுகாப்பு, பசுமை எரிசக்தி பயன்பாடு என பல்வேறு முன்மாதிரியான நவீன கட்டமைப்புகளுக்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை இழந்து வருகிறது தமிழக அரசு! இதன் காரணமாகவே மத்திய அரசு தற்போது நடப்பு நிதி ஆண்டிற்கான ₹1,045.38 கோடி நிதியை நிறுத்தி வைத்துள்ளது.
Source : Dinamalar