டெல்லி செல்லும் தமிழக பாஜக! தமிழகம் திரும்பும் போது வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் - அண்ணாமலை பேட்டி!

Update: 2024-03-06 07:53 GMT

2024 லோக்சபா தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்திருந்தது. 

இதனை தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் தொகுதிவாரியான நிர்வாகிகளிடம் பாஜக ஆலோசனை மேற்கொண்டு தொண்டர்களின் கோரிக்கைகளின் படி மேற்கொள்ளப்பட்ட வேட்பாளர் பட்டியலுடன் இன்று டெல்லி விரைந்துள்ளது. 

முன்னதாக டெல்லி செல்லும் முன்பு சென்னையில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். அப்பொழுது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் டெல்லி செல்ல உள்ளோம், அங்கு பாஜக தேசிய தலைவர், உள் துறை அமைச்சர் போன்ற முக்கிய அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தின் அரசியல் சூழல் மற்றும் தமிழகத்தின் 39 தொகுதிகளில் யார் போட்டியிடலாம் என்பது குறித்த பட்டியலையும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம்! 

அதோடு தற்போது மேற்கொள்ளப்பட்ட 39 தொகுதிகளில் வேட்பாளர்களும் பாஜக தொண்டர்களின் ஆலோசனைப்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது, மேலும் இப்பட்டியலில் பெண் வேட்பாளர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது டெல்லி திரும்பி வந்த பிறகு தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என்று கூறினார். 

Source : The Hindu Tamil thisai 

Similar News