நாட்டின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ! பிரதமர் துவக்கி வைத்தார்!

Update: 2024-03-06 07:54 GMT

பிரதமர் நரேந்திர மோடி தற்போது பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல நலத்திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வருகிற நிலையில் கொல்கத்தா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் முதன் முதலான நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளார். 

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மேற்கு வழி தரத்தில் ஒரு பகுதியாக உள்ள ஹவுரா மைதானம் மற்றும் எஸ்பிளன்னேட் மெட்ரோ பாதை இடையேயான ஹூக்ளி நதியின் நீர்மட்டத்தில் இருந்து 16 மீட்டர் ஆழத்தில் 520 மீட்டர் தூரத்திற்கு நீருக்குள் அடியில் செல்லும் மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. 

இது நாட்டிலே முதல்முறையாக நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில் சேவை என்றும் கூறப்படுகிறது இதன் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார் அதற்குப் பிறகு மெட்ரோவில் பள்ளி மாணவ மாணவிகளுடன் பயணித்த பிரதமர் அவர்களுடன் மகிழ்ச்சியாக கலந்துரையாடியபடி தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார். 

Source : Dinamalar 

Similar News