தேசிய படைப்பாளிகள் விருது..விழாவில் தமிழக பெண்ணின் காலை தொட்டு வணங்கிய பிரதமர்!

Update: 2024-03-08 10:37 GMT

சமூகத்தில் தற்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் படைப்பாளிகளின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு தேசிய படைப்பாளிகள் விருதை அறிவித்தது. மேலும் இதற்கான போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பலப் பிரிவுகளில் விருதுகளை வழங்கினார். 



அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமிக்கு சிறந்த கதை சொல்பவர் விருது வழங்கப்பட்டது. ஏனென்றால் இவர் வரலாற்று தகவல்களை யூடியூப் உள்ளிட்ட தளங்களில் தொடர்ந்து பதிவேற்றி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தவர். அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி கீர்த்திகா கோவிந்தசாமி என்பவருக்கு விருது வழங்கிய பொழுது அந்தப் பெண் பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்க பதிலுக்கு பிரதமர் மோடியும் அப்பெண்ணின் காலை மூன்று முறை தொட்டு வணங்கியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி விருது வழங்கிய அனைவரிடத்திலும் பேசியதாவது, சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் படைப்பாளிகள் இந்த தேசிய படைப்பாளிகள் விருது திட்டத்தில் இணைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக முதலாவது தேசிய படைப்பாளிகள் விருது மகா சிவராத்திரியை முன்னிட்டு வழங்கப்பட்டிருப்பது தற்செயலாகவும் அமைந்துள்ளது. விருது பெற்றுள்ள உங்கள் படைப்புகள் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அதனால் நீங்கள் அனைவரும் இணையத்தின் மிகவும் மதிப்பு மிக்க நபர் ஆகிறீர்கள் என்று பேசியுள்ளார்.

Source : Dinamalar 




 


 


Similar News