விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் மோடி அரசு.. அதிகரிக்கும் பயிர் காப்பீடு திட்டங்கள்..

Update: 2024-03-08 12:33 GMT

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட கடந்த 8 ஆண்டுகளில் 56.80 கோடி விவசாயிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 23.22 கோடிக்கும் மேற்பட்ட விவசாய விண்ணப்பதாரர்கள் உரிமை கோரல்களைப் பெற்றுள்ளனர். இந்தக் காலகட்டத்தில், சுமார் ரூ.31,139 கோடியை விவசாயிகள் தங்கள் பங்காகச் செலுத்தியுள்ளனர். இதில் ரூ.1,55,977 கோடிக்கு மேல் உரிமைக் கோரிக்கைகள் அவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள் செலுத்தும் ஒவ்வொரு 100 ரூபாய் பிரீமியத்துக்கும், அவர்களுக்கு சுமார் ரூ.500 இழப்பீட்டுத் தொகையாகக் கிடைத்துள்ளது. பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தேவை அடிப்படையிலான திட்டமாகும். இது மாநிலங்கள் மற்றும் விவசாயிகளின் தன்னார்வ அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டுகளில் விவசாயிகளின் விண்ணப்பங்கள் எண்ணிக்கை முறையே 33.4% மற்றும் 41% அதிகரித்துள்ளது. மேலும், 2023-24-ம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளின் எண்ணிக்கையில் இதுவரை 27% அதிகரித்துள்ளது. மேலும், 2023-24-ம் நிதியாண்டில் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட மொத்த விவசாயிகளில் 42% பேர் கடன் பெறாத விவசாயிகள் ஆவர்.




பிரீமியத்தின் அடிப்படையில் உலக அளவில் மூன்றாவது பெரிய காப்பீட்டுத் திட்டமான பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 2016-ல் தொடங்கப்பட்டது, எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் பயிர் இழப்பு அல்லது சேதத்திலிருந்து விவசாயிகளை இது பாதுகாக்கிறது. பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளின் வருமானத்தை நிலைப்படுத்த நிதி உதவி அளிப்பது உட்பட திட்டத்தின் நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது. இத்திட்டம் தொடர்ந்து மறு ஆய்வு செய்யப்பட்டு, பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து, குறிப்பாக அதன் செயல்பாட்டில் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க உதவுகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் இந்தத் திட்டத்தை தன்னார்வமாக மாற்றுவதன் மூலம், அதிக விவசாயிகளை இதில் பங்கெடுக்க வைக்கலாம்.


பங்குதாரர்களின் வாராந்திர காணொலி காட்சி மூலம் இழப்பீடு கோரிக்கைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு காண்பது, காப்பீட்டு நிறுவனங்கள், மாநிலங்களுடன் நேருக்கு நேர் சந்திப்பது உட்பட பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுவதை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக, இத்திட்டத்தின் கீழ் பயன் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. விவசாயிகள் வங்கிக் கடன்களுக்கான சந்தா செலுத்துவதைக் காட்டிலும் தாமாக முன்வந்து இத்திட்டத்திற்கு சந்தா செலுத்துகின்றனர். விவசாயிகளின் பங்களிப்பை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News