இந்திய குடியுரிமை விண்ணப்பிக்க பிரத்தியேக இணையதளம்! மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

Update: 2024-03-12 10:52 GMT

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். 

அதன்படியே குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு (மார்ச் 11ஆம் தேதி) நேற்று மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. இது தொடர்பான அறிவிப்பை அரசிதழில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. 

மேலும் அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ராஸ்வி குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்திய முஸ்லிம்கள் வரவேற்க வேண்டும், இந்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை! அதனால் இச்சட்டத்தை எதிர்க்காமல் வரவேற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தில் குடியுரிமை பெற விரும்புவோர் விண்ணப்பிப்பதற்கான பிரத்தியேக இணையதளத்தையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. Indiancitizenshiponline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் குடியுரிமை வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. 

Source : Dinamalar 

Similar News