முப்படைகளின் 'பாரத் சக்தி' பயிற்சி.. இந்திய இளைஞர்களை அழைத்த பிரதமர் மோடி..

Update: 2024-03-13 10:10 GMT

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று முப்படைகளின் நேரடி பயிற்சியின் வடிவத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களை ஒருங்கிணைத்து செய்யப்பட்ட செயல் விளக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடியை பார்வையிட்டார். நாட்டின் தற்சார்பு இந்தியா முன்முயற்சியை அடிப்படையாகக் கொண்ட நாட்டின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் 'பாரத் சக்தி' உள்நாட்டு ஆயுத அமைப்புகள் மற்றும் தளங்களின் வரிசையைக் கொண்டிருக்கும். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ள வீரம் மற்றும் திறன்கள் புதிய இந்தியாவின் அழைப்பு என்று கூறினார். "இன்று, மீண்டும் ஒருமுறை பொக்ரான் இந்தியாவின் தற்சார்பு இந்தியா, தன்னம்பிக்கை மற்றும் அதன் பெருமையின் திரிவேணியின் சாட்சியாக மாறியுள்ளது" என்று அவர் கூறினார். "இந்தியாவின் அணு ஆயுதச் சோதனையை நேரில் கண்ட அதே பொக்ரான் தான், இன்று உள்நாட்டுமயமாக்கலின் வலிமையை நாம் காண்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.


மேம்பட்ட எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட நீண்ட தூர அக்னி ஏவுகணையின் சோதனை பற்றி பேசிய பிரதமர், உலகில் ஒரு சில நாடுகள் மட்டுமே இந்த புதிய யுக தொழில்நுட்பம் மற்றும் வலிமையைக் கொண்டுள்ளன என்று உறுதிபடக் கூறினார். "தற்சார்பு இந்தியா இல்லாமல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற யோசனையை கற்பனை செய்து பார்க்க முடியாது" என்று கூறிய பிரதமர், மற்றவர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். இன்றைய தருணம் இந்தத் தீர்மானத்தை நோக்கிய ஒரு அடி என்று குறிப்பிட்ட பிரதமர், சமையல் எண்ணெய் முதல் போர் விமானங்கள் வரை தற்சார்பு நிலைக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருவதாகக் கூறினார். இந்தியாவின் வலிமையை பிரதிபலிக்கும் டாங்கிகள், பீரங்கிகள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் மூலம் தற்காப்பில் தற்சார்பு வெற்றியைக் காணலாம் என்று பிரதமர் கூறினார். "ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், தகவல் தொடர்பு சாதனங்கள், சைபர் மற்றும் விண்வெளி ஆகியவற்றுடன் மேட் இன் இந்தியா பறப்பதை நாம் அனுபவித்து வருகிறோம்.


இதுதான் பாரத் சக்தி என்று பிரதமர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானங்கள், மேம்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், நாசகாரி கப்பல்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள், மேம்பட்ட அர்ஜுன் டாங்கிகள் மற்றும் பீரங்கிகளையும் அவர் குறிப்பிட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News