அணுசக்தியை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு.. அதுவும் மாணவர்களுக்கு..

Update: 2024-03-22 09:06 GMT
அணுசக்தியை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு.. அதுவும் மாணவர்களுக்கு..

இந்தியா முழுவதும் பல்வேறு திட்டங்கள் மூலம் அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய மாணவர் படை, இந்திய அணுசக்திக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம். தேசிய மாணவர் படை, இந்திய அணுசக்திக் கழகம் இடையே 2024, மார்ச் 21 அன்று புதுதில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


பல்வேறு திட்டங்கள் மூலம் அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங், இந்திய அணுசக்திக் கழக நிர்வாக இயக்குநர் பி.வி.எஸ்.சேகர் ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.


இந்திய அணுசக்திக் கழகம் தொடர்புடைய நபர்களை தேசிய மாணவர் படையுடன் முகாம்களின் போது ஈடுபடுத்தி தேசிய மாணவர் படையினருக்கு அணுசக்தி குறித்த பல்வேறு செயல்பாடுகளை அளிக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், நாடு முழுவதும் உள்ள இந்திய அணுசக்திக் கழகத்தின் பல்வேறு வசதிகளை தேசிய மாணவர் படை வீரர்கள் பார்வையிடத் தனித்துவமான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதுடன், அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துதல் முறை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த நேரடி அனுபவத்தை அளிக்கும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News