மியூசிக் அகாடமியின் புனிதத்திற்கு கேடு! மாநில தலைவர் அண்ணாமலை திருச்சூர் பிரதர்ஸ்ஸிற்கு ஆதரவு!

Update: 2024-03-22 10:39 GMT

கடந்த இரண்டு நாட்களாக கர்நாடக இசை, கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் உலகம் முழுவதும் பெரும் புயலை கண்டு வருகிறது. மெட்ராஸ் மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதை இடதுசாரி சார்புடைய, பெரியாரைப் போற்றி வந்த டி எம் கிருஷ்ணாவுக்கு வழங்குவதாக அறிவித்தது. இதனை சக இசைக் கலைஞர்களான ரஞ்சனி - காயத்ரி மற்றும் திருச்சூர் சகோதரர்கள் போன்றோர் எதிர்த்து வந்தனர்.

 இந்த நிலையில் ரஞ்சனி - காயத்ரி மற்றும் திருச்சூர் சகோதரர்கள் போன்ற இசைக்கலைஞர்களுக்கு பாஜக மாநில தலைவர் ஆதரவு தெரிவித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

9 தசாப்தங்களுக்கும் மேலாக கர்நாடக இசை மற்றும் ஆன்மீக உணர்வின் ஆலயமாகப் போற்றப்படும் மியூசிக் அகாடமி, அமைப்பின் புனிதத்துக்குக் கேடு விளைவிக்கும் பிரிவினை சக்திகளால் சிதைவடையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

தமிழக பாஜக மியூசிக் அகாடமியின் தற்போதைய அதிகாரத்தின் விரோத அணுகுமுறைக்கு எதிராக கூட்டாக குரல் எழுப்பிய அனைத்து புகழ்பெற்ற கலைஞர்களுக்கும் ஒற்றுமையுடன் நிற்கிறது. ரஞ்சினி, காயத்ரி, திருச்சூர் பிரதர்ஸ், ரவி கிரண், ஹரிக்கதா, துஷ்யந்த் ஸ்ரீதர், விஷாகா ஹரி மற்றும் பலர் மியூசிக் அகாடமியின் புனிதத்தை பாதுகாக்க பாடுபடுகின்றனர் என்று பதிவிட்டுள்ளார். 

Source : Malai malar & The commune 

Similar News