மாற்றத்திற்கான தேர்தல்....பாஜக ஆட்சிக்கு வந்தால் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் - அண்ணாமலை பேச்சு!

Update: 2024-03-26 10:39 GMT

திருப்பூர் பல்லடத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். 

அதில், கொங்கு மண்டலத்தில் உள்ள விவசாயிகள் தொழில்துறையினர் என அனைவரின் பிரச்சினைகளையும் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், வட அமெரிக்காவிலிருந்து மக்காச்சோளம் இறக்குமதி வரியை நீக்கியதன் மூலம் குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். 

மேலும், பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த பொழுது கிராமங்கள் தோறும் சென்று குளங்களை தூர்வாரினார் அப்படி தூர்வாரியதால் தற்போது குஜராத்தின் நிலத்தடி நீர்மட்டம் 13 மீட்டர் அளவுக்கு உயர்ந்திருக்கிறது ஆனால் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து இருக்கிறது. 

அரசியல் கட்சிகளுடன் சண்டையிடுவதற்காக தேர்தலில் போட்டியிடவில்லை இது மாற்றத்திற்கான தேர்தல்! மாற்றத்திற்காக நான் போட்டியிடுகிறேன்! பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் குழாய்கள் மூலம் எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்று பேசினார். 

Source : Dinamalar 

Similar News