லோக்சபா தேர்தலுக்கான நாட்கள் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிற நிலையில் தென்காசியில் வேப்பமனு தாக்கல் தொடங்கிய முதல் மூன்று நாட்கள் யாருமே தாக்கல் செய்யாமல் இருந்தனர்.
இதனை அடுத்து நேற்று பாஜக வேட்பாளரான தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் பாஜக, பாமக மற்றும் அமமுக போன்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தொண்டர்களுடன் மேலதாளம் முழங்க தென்காசி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மேலும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் அவர்களும் தாமரை சின்னத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதோடு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் சிவகங்கையிலும், புதிய நீதி கட்சியின் நிறுவன தலைவர் வேலூரிலும், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் ராதிகா ராஜ்குமார் அவர்களும் பாஜக கூட்டணியிலும் பாஜக சார்பிலும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி கிருஷ்ணகிரி வேட்பாளர் நரசிம்மா, கன்னியாகுமரி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், சென்னை வடக்கு வேட்பாளர் பால் கனகராஜ், கரூர் பாராளுமன்ற வேட்பாளர் செந்தில்நாதன், திருவள்ளூர் வேட்பாளர் பொன் பாலகணபதி, திருப்பூர் வேட்பாளர் ஏ பி முருகானந்தம், திருநெல்வேலி வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தென் சென்னை வேட்பாளர் வினோத் பி செல்வம் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
Source : The Hindu Tamil thisai