அரசியலில் விடுமுறையே எடுத்தது இல்லை, அம்மாவை பார்த்தும் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது - அண்ணாமலை!.

Update: 2024-03-26 12:40 GMT
அரசியலில் விடுமுறையே எடுத்தது இல்லை, அம்மாவை பார்த்தும் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது - அண்ணாமலை!.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தனது பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உரையாற்றினார் அப்பொழுது இதுவரை அரசியலில் விடுமுறை என்பதை எடுத்ததே இல்லை என் அம்மாவை பார்த்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ளது என்று கூறியுள்ளது தற்போது கவனம் பெற்று வருகிறது. 

அதாவது, முள் மெத்தைகளைப் போன்றது தான் எம்பி பதவி மேலும் பிரதமர் மோடி குதிரையிடம் லகான் போட்டு வேலை வாங்குவதைப் போல வேலை வாங்குவார், அவரிடமிருந்து யாருமே தப்பிக்க முடியாது, பிரதமர் மீண்டும் பிரதமராக அமர்வதற்கு 250 அல்லது 300 பாஜக எம்பி' கள் வெற்றி பெற்றால் போதும் ஆனால் அவர் 400 தொகுதிகளையும் கைப்பற்றி ஆட்சி நடத்த வேண்டும் என்று கூறுகிறார்! 

ஏனென்றால் பல அதிக மதிப்பிலான பெரிய திட்டங்கள் உள்ளது அவற்றிற்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் செலவு கிடையாது கோடிக்கணக்கான செலவுகள் அதனை இடையில் இருப்பவர்கள் அபகரிக்கக் கூடாது அனைத்து மக்களுக்கும் எல்லா விதமான நலத்திட்டங்களும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே 400 க்கும் 400 தொகுதி வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார் எனவும், 

அரசியலில் நான் விடுமுறையே எடுத்தது இல்லை! அனைவரும் என் மீது கோபமாக இருக்கிறார்கள் நீங்கள் ஊருக்கு வரவேண்டும் தோட்டத்துக்கு வர வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் தோட்டத்திற்கு சென்று நான்கு - ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது, அம்மாவை பார்க்க வரும்போது உங்களை பார்க்கலாம் என்று கூறுகிறார்கள் ஆனால் அம்மாவை பார்த்தும் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது என்று பேசியுள்ளார் அண்ணாமலை! 

Similar News