பிரதமர் சூட்டிய பெயருக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம்.. பிரதமர் மோடி என்றால் சும்மாவா..

Update: 2024-03-26 15:13 GMT

நிலவின் தென் பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி சூட்டிய சிவசக்தி என்ற பெயரை சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஆக.,23 ம் தேதி இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சாதனம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதற்காக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையக கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி விஞ்ஞானிகளை பாராட்டினார்.


மேலும், விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை குறிக்கும் வகையில் ஆக.,23ம் தேதி ‛ தேசிய விண்வெளி தினம்' ஆக கொண்டாடப்படும் என அறிவித்ததுடன், நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு ‛சிவசக்தி' என பெயர் வைத்தார். அதுமட்டுமல்லாது ஒட்டு மொத்த இந்தியர்களையும் பெருமைப்படுத்தும் வகையில் இஸ்ரோ இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து இருந்தது. 


இந்த நிலையில், பிரதமர் மோடி சூட்டிய ‛ சிவசக்தி ' பெயருக்கு சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகாரம் அளித்து உள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், "விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு சூட்டப்பட்ட ‛சிவசக்தி' என்ற பெயருக்கு, கோள்களுக்கு பெயர் சூட்டுவதற்கான சர்வதேச வானியல் ஒன்றியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளது'' எனக்கூறப்பட்டு உள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News