தேர்தல் விதிமுறைகளை மீறி போதை பொருள் சப்ளை.. அதிரடி காட்டி மடக்கும் பறக்கும் படையினர்..

Update: 2024-03-27 13:53 GMT

மதுபானம், கஞ்சா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு உள்ளது. தேர்தல் விதிமுறைகள் மீறியதாக இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சட்டமன்ற தொகுதிக்கு 9 குழுக்கள் வீதம், மாவட்டம் முழுவதும் 81 பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறார்கள் குறிப்பாக பறக்கும் படையினர் 24 மணி நேரமும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.


இந்த நிலையில் மொத்தமாக திருச்சி மாவட்டத்தில் மட்டும் அதிகமாக போதைப்பொருள் பிடிபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. லோக்சபா தேர்தல் காரணமாக தேர்தல் விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இன்று எடுத்து வரும் போதை பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதனுடைய மொத்த மதிப்பு இதுவரை ஒரு கோடியே 36 லட்சத்து 24 ஆயிரத்தி ஐநூற்று முப்பது என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.


அது மட்டும் கிடையாது பிடிபட்ட பிறகு சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய ஆவணங்கள் கொடுத்ததால் அவர்களிடம் திரும்ப அதை பறக்கும் படையினர் ஒப்படைத்து இருக்கிறார்கள். அதனுடைய மொத்த மதிப்பு 27 லட்சத்து 39 ஆயிரத்தி முன்னூறு ஆகும்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News