சேலைகளை பதுக்கி சிக்கிய அதிமுக வேட்பாளர்! தேர்தல் ஆணைய அதிகாரி என்ன கூறுகிறார்?

Update: 2024-03-28 08:44 GMT

ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ள ஆற்றல் அசோக்குமாரின் சொத்து மதிப்பு 653 கோடி என்பதால் அம்மாநிலத்தின் ஸ்டார் வேட்பாளராக பார்க்கப்படுகிறார்! இந்த நிலையில் இவர் சேலைகளைப் பதுக்கிய வழக்கில் சிக்கி உள்ளது அதிமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அதாவது கடந்த 26 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையத்தின் சி- விஜில் புகார் செயலி மூலம் ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமான சில இடங்களில் சேலைகள் பதுக்கப்பட்டு வாக்காளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்ததை அடுத்து பறக்கும் படையினர் நேரில் சென்று அதனை சோதனை இட்டு உரிய ஆவணங்கள் இல்லாததால் 60 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான சேலைகளை பறிமுதல் செய்து வந்தனர். ஆனால் இதற்காக யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை! மேலும் இந்த தகவல் கலெக்டருக்கும் தெரியப்படுத்தப்படவில்லை! 

இதற்குப் பிறகு இந்த தகவலை தேர்தல் ஆணைய அதிகாரி கலெக்டருக்கு தெரியப்படுத்தி கலெக்டர் இந்த பறிமுதலில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாரை அழைத்து விசாரணை மேற்கொண்டு தேர்தல் விதிகளின்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர்களை கண்டித்து அனுப்பியுள்ளார். 

இதனால், சித்தோடு போலீசார் சேலைகளை பதுக்கி வைத்ததற்காக அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், கட்டட உரிமையாளர் ரவிச்சந்திரன் மற்றும் யுவராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்த விசாரணைகள் வலுப்பெற்றால் பலர் இதில் சிக்குவார்கள் என தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். 

Source : Dinamalar 

Similar News