பெண்களை மையமாக வைத்து முன்னேற்றம் அடையும் மோடி அரசு.. உரிய அங்கீகாரத்துடன் மகளிர்..
மகளிருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நமது உலகின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கான முதலீடாகும் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறுகிறார். "பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது நமது உலகின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கான முதலீடு" என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஃபிக்கி மகளிர் அமைப்பின் 40 ஆண்டு நிறைவு விழாவில் உறுப்பினர்கள் இடையே உரையாற்றிய தன்கர், "சம வாய்ப்புகளை ஊக்குவிப்பதன் மூலமும், தடைகளை களைவதன் மூலமும், பெண்களின் முழக்கங்கள் மற்றும் சாதனைகளைப் பெருக்குவதன் மூலமும், நியாயமான ஒரு சமூகத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், வளமான மற்றும் நீடித்த ஒரு சமூகத்தை உருவாக்குகிறோம்" என்று குறிப்பிட்டார்.
சந்திரயான் இயக்கத்தில் பெண் விஞ்ஞானிகள் ஆற்றிய தலைமைப் பங்கை அவர் சுட்டிக் காட்டினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பெண்களை மையமாக வைத்து அவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது. அந்த வகையில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு முழுமையான அங்கீகாரம் அளிக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் பெண்கள் தற்போது உயர்ந்த இடத்தில் தான் இருக்கிறார்கள்.
பாலின சமத்துவம், நீடித்த வளர்ச்சிக்கும் இடையே உள்ள பிரிக்க இயலாத தொடர்பை எடுத்துரைத்த திரு தன்கர், "நீடித்த வளர்ச்சியை அடைவதற்கு பாலின நீதி மற்றும் பெண்களின் பொருளாதார நீதி ஆகியவை முக்கியமானவை" என்று கருத்து தெரிவித்தார். பெண்கள் அதிக அளவில் பணி புரியும்போது, பொருளாதாரம் வளரும் என்று அவர் மேலும் கூறினார்.
Input & Image courtesy: News