பாஜக வேட்பாளரின் டெபாசிட்டை கட்டிய மாணவர்கள்! தங்கள் நன்றியை தெரிவித்தது மகிழ்ந்த மாணவர்கள்!

Update: 2024-04-02 13:37 GMT

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மத்திய இணை அமைச்சராக உள்ள முரளிதரனுக்கு வேட்புமனு தாக்களின் டெபாசிட்டை மருத்துவம் படிக்கும் மாணவ மாணவிகள் செலுத்தியுள்ளனர். 

கேரள மாநிலத்தில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஏப்ரல் நான்காம் தேதியில் நிறைவடைய உள்ள நிலையில் ஆற்றிங்கல் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சரான முரளிதரன் போட்டியிட உள்ளார். 

அதனால் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய சென்ற பொழுது உக்ரைனில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களே முரளிதரனின் வேட்பு மனுவிற்கான டெபாசிட் தொகையை திரட்டி செலுத்தியுள்ளனர். ஏனென்றால் ரஷ்யா மற்றும் உக்கரனுக்கு இடையே போர் நிலவிய போது அங்கு மருத்துவம் படிப்பதற்காக சென்ற இந்திய மாணவ மாணவிகளை ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலம் மத்திய அரசு மீட்டு அவர்களை தாயகம் திரும்ப உதவியது. 

இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் முரளிதரனின் பங்களிப்பை பாராட்டி அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாணவர்களை ஒன்று கூடி அவருக்கு டெபாசிட் தொகையை செலுத்தியுள்ளனர். 

Source : Dinamalar 

Similar News