ஓட்டு கிடையாது என திமுக நிர்வாகியை விரட்டிய பெண்கள்...! வைரலாகும் வீடியோ

Update: 2024-04-03 13:57 GMT

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில் ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியின் ஆதரவாளர்கள் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவையில் திமுக சார்பில் போட்டியிடும் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொள்ள சென்ற பொழுது இரண்டு பெண்கள் ஓட்டு கேட்டு வந்த பொழுது வந்திடாதீங்க என்று திமுகவால் அடைந்த தங்களது ஏமாற்றத்தை கொட்டி தீர்த்துள்ளனர். 

அதாவது "என்ன நியாயம் இருக்கிறது? வீட்டு வரி கரண்ட் பில்லுனு எவ்வளவு ஏத்திருக்கீங்க எதுவுமே கேட்காம நாங்க கட்டிக்கிட்டே இருக்கணும்! இப்போ ஓட்டு மட்டும் கேட்டுட்டு எதுக்கு வரீங்க நோ சான்ஸ் ஓட்டு கேட்டு வந்தரவே வந்துடாதீங்க! சரி என்னதான் நீங்க செஞ்சு இருக்கீங்க உங்க தலைவர் செஞ்சத சொல்லுங்க வாக்குறுதி கொடுத்து செஞ்ச எல்லாத்தையும் சொல்லுங்க பாக்கலாம்" என்று அப்பெண்கள் திமுக நிர்வாகி இடம் சரமாரியாக கேள்வி கேட்க திமுக நிர்வாகி பதில் பேச முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்! 

மேலும், திமுக நிர்வாகி உடன் சேர்ந்த மற்ற மகளிரையும் "ஏன் இப்படி திமுகவுடன் சேர்ந்துக்கிட்டு ஓட்டு கேட்க வரீங்க? உங்கள் குடும்பமே பாதிக்கும்! மக்கள் இந்த முறை யாரும் ஓட்டே போட மாட்டாங்க!" என்று திமுக நிர்வாகியிடம் தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து ஓட்டு போட மாட்டோம் இங்கிருந்து செல்லுங்கள் என்று அனுப்பியுள்ளார். மேலும் இதனை வீடியோவாக பதிவிட்டு அதனை சமூக வலை தளத்திலும் வெளியிட்டுள்ளனர் இது தற்போது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. 

Source : The commune 

Similar News