மீண்டும் ரத்து...இன்று இரவு தமிழகம் வர இருந்த மத்திய உள்துறை அமைச்சர் பயணம்..!

Update: 2024-04-04 11:10 GMT

தமிழக முழுவதும் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களையும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சர்கள் சிலர் தமிழகத்திற்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. 

இதனை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை தேனி மற்றும் மதுரையிலும் நாளை சிவகங்கை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அதற்குப் பிறகு சிறிது நேரத்தில் மத்திய அமைச்சரின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. 

இந்த நிலையில் இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு வருகை தர உள்ளார். நாளை காலை 9 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய உள்ளார். மேலும் மதுரையிலிருந்து தென்காசி சென்று பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் தென்காசியின் வேட்பாளராக உள்ள ஜான்பாண்டியனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் மீண்டும் மத்திய அமைச்சரின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Source : Dinamalar 

Similar News