சென்னையில் இருந்து அயோத்தி செல்லும் தங்கத்தட்டில் எழுதப்பட்ட ஸ்ரீராம் சரித மானஸ் நூல்..!

Update: 2024-04-04 11:48 GMT

சென்னையிலிருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்கிறது தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ராமாயண புனித நூல்! 

ஸ்ரீராம் சரித மானஸ் என்ற துளசிதாசர் எழுதியுள்ள ராமாயண கதையை 522 தங்க தகடுகளில் எழுதி அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு வழங்க உள்ளதாக சென்னையில் உள்ள உம்மிடி பங்காரு நகை கடையின் நிர்வாக பங்குதாரர் அமரேந்திரன் உம்மிடி கூறியுள்ளார். 

மேலும், ராம பக்தரான லட்சுமி நாராயணன் என்பவர் ராமாயண கதை நூல் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் ராமர் கோவிலில் இருக்க வேண்டும் அதற்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை தெரிவித்திருந்தார், அதற்கு பிறகு நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து தாமரை தட்டில் தங்க முலாம் பூசி அதில் எழுத்துக்களை பொறிக்கலாம் என்று முடிவு செய்து பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், சுந்தர காண்டம் மற்றும் புத்தக காண்டம் ஆகிய அனைத்து பாகங்களிலும் உள்ள போதனைகள் ஆன்மீக நுண்ணறிவு கருத்துக்கள் என சில முக்கியமான பகுதிகளை இந்த தங்கத் தகட்டில் பொறித்துள்ளோம். 

சுமார் ஒரு மில்லி மீட்டர் தடிமன் உள்ள இந்த தகடின் இரண்டு பக்கங்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது, வெற்றி மொத்த எடை காலத்தில் 147 கிலோ எனவும் இதனை செய்து முடிப்பதற்கு 8 மாதங்கள் ஆகியுள்ளது என்றும் கூறினார். 

அதோடு வருகின்ற எட்டாம் தேதி அயோத்திக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாகவும் ராம நவமி அன்று கோவில் கருவறைக்கு ராம பக்தர் லட்சுமி நாராயணன் இதனை அர்ப்பணிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். 

Source : Dinamalar 

Similar News