சனாதன எதிர்ப்பை கண்டிக்கவில்லை என அதிர்ப்தியால் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் கௌரவ் வல்லப்!

Update: 2024-04-05 13:29 GMT

சனாதன தர்மத்தை குறித்து விமர்சித்து பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் கட்சியிலிருந்து விலகினார் கௌரவ் வல்லப். 

அதாவது, இண்டி கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர், சனாதனத்தை எதிர்த்தும் விமர்சித்தும் பேசிய பொழுது காங்கிரஸ் கட்சி அவர்களை கண்டிக்காமல் மௌனம் காத்து நின்றது, மேலும் அயோத்தியில் ராமர் கோவிலின் திறப்பு விழாவின் பொழுது கலந்து கொள்ள அழைப்பு வந்தும் அதனைப் புறக்கணித்தது! இது எனக்கு காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. திசையில்லா பாதையை நோக்கியும் காங்கிரஸ் கட்சி சென்று கொண்டிருக்கிறது அதில் எனக்கு உடன்பாடில்லை! 

நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்பவர்கள் குறித்து அவதூறாக பேசவோ சனாதனத்துக்கு எதிரான கருத்துக்களை கூறவோ என்னால் இயலாது, அதுமட்டுமின்றி ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசும் காங்கிரஸ் மறுபக்கம் இந்து சமூகத்தை எதிர்க்கிறது இதனால் காங்கிரஸ் ஒரு மதத்தை மட்டும் ஆதரிக்கிறது என்ற பிம்பத்தை மக்களுக்கு காட்டுகிறது இவை காங்கிரசின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது. அதனால் இவை அனைத்தும் என்னை போன்றவர்களை மிகவும் வருத்தம் அடைய செய்தது அதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் கௌரவ் வல்லப் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு கடிதம் அனுப்பி உள்ளார். 

இதனைத் தொடர்ந்து அவர் டெல்லியில் பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். 

Source : The Hindu Tamil thisai 

Similar News