சோமனூரில் ஜவுளி சந்தை, பவர் டெக்ஸ் திட்டம், ஆனைமலை நல்லாறு திட்டம் என கோவை மக்களுக்கு அண்ணாமலையின் வாக்குறுதிகள்!
லோக்சபா தேர்தலின் பிரச்சாரங்கள் தீவிரமாக அனல் பறக்கும் வெயிலுக்கு மத்தியில் அனலாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையின் வேட்பாளராக தனது பிரச்சாரத்தை கோவை முழுவதும் பரபரப்பாக மேற்கொண்டு வருகிறார். மேலும் ஒவ்வொரு பகுதியும் மற்றும் கிராமங்களில் உள்ள பிரச்சனைகளை எடுத்து கூறி அவற்றை சரி செய்வதற்கான தனது வாக்குறுதியையும் கூறி வருகிறார் அதன்படி,
1. தலை விரித்தாடும் போதை பழக்கத்தை முடக்க பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கோவைக்கு வரும்பொழுது 45 நாட்களில் கோயம்புத்தூருக்கு நார்கோட்டிக்ஸ் கண்ட்ரோல் பீரோவின் (NCB) அலுவலகத்தை திறந்து வைப்போம்!
2. நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சியோட (NIA) அலுவலகம் கோவையில் திறக்கப்படும் எந்தவித குற்றவாளிக்கும் குற்றங்களுக்கும் கோவையில் இடம் இல்லை!
3. கோவை - அயோத்தி - கோவை செல்லும் ஆஸ்தா ரெயினை நிரந்தரபடுத்துவோம்!
4. 1958 இல் இருந்து கிடப்பில் போடப்பட்டுள்ள ஆனைமலை நல்லாறு திட்டத்தை 10 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்துவோம்!.
5. கோவையில் ஒவ்வொரு கிராமத்திலும் முதல் 100 நாட்களில் இளைஞர்களுக்கு வேண்டிய விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்!
6. கோவையில் மோடி மருந்தகத்தை குறைந்தது ஐந்து இடங்களில் முதல் 100 நாட்களில் அமைக்க ஏற்பாடு செய்யப்படும், இதனால் மருந்துகளின் விலை 80 சதவீதம் குறைவில் கிடைக்கும்!
7. கோயம்புத்தூரில் விமான நிலையம் விரிவாக்கம், ரயில்வே நிலையம் மேம்படுத்துதல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஜீவ நதியாக இருக்கும் நொய்யல் தாயை மீட்டெடுப்பது என அனைத்தும் மேற்கொள்ளப்படும்.
8. கோவையில் விவசாயிகளுக்காக நான்கு லட்சம் ஏக்கரில் பாசன வசதி செய்து தரப்படும்.