கூடலூர் மக்களை புறக்கணிக்கும் திமுக, அதிமுக..நீலகிரி பாஜக வேட்பாளர் எல். முருகன் குற்றசாட்டு..!
கூடலூர் தொகுதியில் நீலகிரி லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் எல் முருகன் இன்று பழைய பஸ் ஸ்டாண்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுகவும் அதிமுகவும் கூடலூர் மக்களை புறம் தள்ளி விட்டது, தாயகம் திரும்பிய தமிழ் மக்களின் வேலை வாய்ப்புக்காக துவங்கப்பட்ட டான் டீ நிறுவனத்தை திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்து விட்டது!
2009 ஆண்டில் பல லட்சம் இலங்கை தமிழர்களை இலங்கையிலேயே கொன்று குவித்தனர் அங்கிருந்து தமிழகத்திற்கு திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்திற்காக துவங்கப்பட்ட டான் டீ நிறுவனத்தை இழுத்து மூடுவதற்கு திமுக தயாராகி வருகிறது,
அதனால் டான் டீ தொழிலாளர்களுக்கு சரியான நியாயத்தை பெற்று தருவதோடு கூடலூர் நகரின் போக்குவரத்து சீரமைக்க மேம்பாலம் அமைக்கப்படும் என்று கூறினார்.
Source : Dinamalar