கமலின் இடது மற்றும் வலது மூளையை பரிசோதிக்க வேண்டும் - அண்ணாமலை விமர்சனம்..!.

Update: 2024-04-08 12:51 GMT

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை, ஒவ்வொரு ஊராட்சியில் உள்ள தாய் கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் விளையாட்டு வீரர்களை உருவாக்க உத்திரவாதம் அளித்திருந்தோம், கோவை மாநகரத்திற்குள்ளும் மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போம் என்று நாங்கள் கூறியதை மக்கள் ஆதரிக்க தொடங்கியதில் இருந்து சர்வதேச அளவில் ஒரு ஸ்டேடியத்தை காட்டி தருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். 

4000 கோடியில் ஒரு ஸ்டேடியம் கட்டுவதற்கு பதிலாக முதலில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை மேம்படுத்தலாம் கவர்ச்சிகரமான திட்டங்களை கூறினால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்கள் என்று முதல்வர் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று பேசி இருந்தார். 

மேலும், இந்தியாவின் தலைநகராக நாக்பூர் மாறிவிடும் என்று கமல் கூறியதில் எந்த ஒரு அடிப்படை நியதியும் இல்லை! கமல் உள்ளிட்ட யார் இதனைக் கூறியிருந்தாலும் அவர்களின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும். கமலஹாசன் அவர்களின் இடது மற்றும் வலது மூளையை பரிசோதித்து உரிய சிகிச்சையை அவருக்கு வழங்க வேண்டும், எப்படி நாக்பூரை இந்தியாவின் தலைநகராக மாற்ற முடியும்? ஆர் எஸ் எஸ் அலுவலகம் நாக்பூரில் இருக்கிறது என்பதற்காக அவர் இதனை கூறுகிறார், தன் கட்சியை ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக அடமானம் வைத்துவிட்டு பேசுகிறார் என்று அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

Source : Dinamalar 

Similar News