மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார் மத்திய அமைச்சர் ராஜநாத் சிங்..!

Update: 2024-04-09 09:36 GMT

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை புரிந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜநாத் சிங் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். 

கோவில் நிர்வாகம் சார்பில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை புரிந்த மத்திய அமைச்சர் ராஜநாத் சிங்கிற்கு சிறப்பு மரியாதைகள் செய்யப்பட்டது, மேலும் கோவில் பொற்றாமரை குளத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்ட மத்திய அமைச்சர் பாஜக நிர்வாகிகளை சந்தித்து விட்டு புறப்பட்டு சென்றார். 

முன்னதாக கடந்த முறை பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை புரிந்த பொழுது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை தரிசனம் செய்துவிட்டு சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Source : Dinamalar 

Similar News