பாஜகவின் தேர்தல் அறிக்கை....."பொது சிவில் சட்டம், ஒரு நாடு ஒரு மாணவர் ஐடி"
மோடியின் உத்தரவாதம் என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 14) வெளியிட்டார்.
தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலத்தில் உள்ள சில கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வந்த நிலையில் பாஜக மட்டும் தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் இருந்தது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்த்ததை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சங்கல்ப் பத்ரா இன்று அழைக்கப்படுகின்ற தேர்தல் அறிக்கையை முக்கிய தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
அதில் பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை, பொது வாக்காளர் பட்டியல், ஒரு நாடு ஒரு மாணவர் ஐடி என்ற பொதுவான ஒட்டுமொத்த நாட்டிற்கு ஏற்ற வகையிலான வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தது.
Source : The Hindu Tamil thisai