பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் மேற்கு வங்காள அரசு.. மத்திய அமைச்சர் குற்றம்சாட்டு..

Update: 2024-04-15 11:04 GMT
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் மேற்கு வங்காள அரசு.. மத்திய அமைச்சர் குற்றம்சாட்டு..

பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் வகையில், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு செயல்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டி இருக்கிறார். இது குறித்து மத்திய அமைச்சர் அனுராதாக்கூர் மேலும் கூறும் பொழுது, காங்கிரஸ் கட்சி காலத்தில் பணவிக்கமானது 13 சதவீதம் இருந்தது. தற்போது உலகின் பல பகுதிகளில் போர் நடந்து வருகிறது. இன்றைய காலகட்டத்துடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவின் பணவீக்கம் ஆனது கட்டுக்குள் இருக்கிறது.


கடந்த ஆண்டில் சுமார் 1.5 கோடி பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் சந்திராயன் 3 திட்டம் வெற்றி அடைந்து இருக்காது. ககன்யான் திட்டத்தை பற்றி காங்கிரஸ் சிந்தித்து இருக்கவே மாட்டார்கள் என்று கூறி இருக்கிறார்.

பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் வகையில், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன " என அவர் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News