பிரதமர் மோடி அவர்கள் நேற்று பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். குறிப்பாக இந்த ஒரு நிகழ்ச்சி பாஜக மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசும் பொழுது, "மோடியின் உத்தரவாத ஆவணமாக பாஜக தேர்தல் அறிக்கையை நாட்டு மக்களுக்கு நான் வெளியிடுகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு அம்சங்களையும் உத்திரவாதமாக தான் பாஜக நிறைவேற்றி இருக்கிறது. அந்த வகையில் தேர்தல் அறிக்கையில் புனித தன்மையை நிலை நிறுத்தி இருக்கிறது.nவளர்ந்த பாரதத்தின் நான்கு பழமையான துண்களான இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள், பெண்கள் ஆகியோருக்கான பாஜக தேர்தல் அறிக்கை அதிகாரம் அளித்து வருகிறது.
கனிமமான வாழ்க்கை, தரமான வாழ்க்கை, முதலீடுகள் மூலம் வேலை வாய்ப்பு ஆகியவைதான் எங்களுடைய முக்கிய நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருக்கிறார். மேலும் தமிழ் மொழி பற்றி கூறும் பொழுது, உலகில் நிச்சயமற்ற காலத்தில் வழியாக சென்று கொண்டிருக்கிறோம். அதனால் முழு பெரும்பான்மை கொண்ட நிலையான அரசின் அவசியம் அதிகரிக்கிறது.
ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளை பாஜக தொடங்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதை நோக்கி பணியாற்ற தொடங்கி இருக்கிறோம். பொது சிவில் சட்டம் நாட்டு நலன் சார்ந்தது ஆகும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சாரமயங்கள் அமைக்கப்படும். உலகின் மிகப் பழமையான தமிழ் மொழி பெருமை கூறியது, தமிழ் மொழியின் உலகளாவிய நற்பெயர் பெருமையை உயர்த்த எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படும்" என்று அவர் கூறினார்.
Input & Image courtesy: News