கட்டணமில்லா பேருந்து படிக்கட்டு உடைந்து விழுந்ததால் பரபரப்பு.. பயத்தில் உறைந்த பொதுமக்கள்..
தமிழகத்தில் ஏராளமான பொதுமக்கள் அரசு பேருந்து பயணத்தை தான் நம்பி இருக்கிறார்கள். ஆனால் இங்கு இருக்கும் பேருந்துகள் மிகவும் பழமையானதாகவும் பெருமளவில் மேற்பார்வை இல்லாததால் பழுதடைந்து தான் காணப்படுகிறது. இதனால் இங்கிருந்து எந்த நேரத்தில் உடைந்து விடும் என்பது கூட அறியாது பொதுமக்கள் தங்களுடைய பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மதியம் அரசு டவுன் பஸ் ஒன்று முடங்கி ஆறு சாலையில் சென்று கொண்டு இருந்தது.
அப்பொழுது தாசில்தார் அலுவலகம் சென்ற பொழுது பஸ்ஸின் பின்பக்கம் பெரும் சத்தம் கேட்டது. இதில் பின்புறம் படிக்கட்ட திடீரென உடைந்து சாலையில் விழுந்ததால் இந்த ஒரு சத்தம் கேட்டது. அப்போது படிக்கட்டில் பயணிகள் யாரும் இல்லாத காரணத்தினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனே பஸ் நிறுத்தப்பட்டு பின்னர் உடைந்த படிக்கட்டை பணி மணிக்கு எடுத்து சென்றார்கள் ஊழியர்கள்.
இது சம்பவம் பயணிகள் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்படுத்தியது. இது போன்ற பஸ்களால் அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என்றும் நல்ல நிலையில் உள்ள பஸ்களை மட்டுமே இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து பயணிகள் கோரிக்க வைத்து வருகிறார்கள்.
Input & Image courtesy: News