வேங்கை வயல் மக்கள் மாற்றத்திற்காக வாக்களிக்க முன்வர வேண்டும் - அண்ணாமலை பதிவு..!

Update: 2024-04-16 12:58 GMT

கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த அதிர்ச்சிகர சம்பவங்களில் வேங்கை வயல் சம்பவமும் ஒன்று! பட்டின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் குறித்த செய்திகள் பரபரப்பாக வெளியானது, ஆனால் அந்த குற்றத்தை செய்தவர்கள் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பு உள்ளதாக அறிவித்தனர். 

இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெறும் வாய்வார்த்தைகளில் மட்டும் சமூகநீதி பேசி, இத்தனை ஆண்டுகளாகப் பட்டியல் சமூக மக்களை ஏமாற்றி வரும் திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலும், கையாலாகாத்தனமுமே இதற்கு ஒரே காரணம். வேங்கைவயல் சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கடந்தும், அங்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு ஆறுதல் கூறக் கூட மனமில்லாமல் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். பட்டியல் சமூக மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பார்க்கும் திமுகவுக்கு, சமூகநீதி என்ற வார்த்தையை உச்சரிக்க என்ன தகுதி இருக்கிறது? 

வாக்களிப்பது குடிமக்களின் ஜனநாயக உரிமை. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து, தேர்தலைப் புறக்கணிக்கவிருப்பதாக வேங்கைவயல் மக்கள் அறிவித்திருப்பது, மிகவும் வருத்தத்திற்குரியது. வேங்கைவயல் மக்கள், மாற்றத்திற்காக வாக்களிக்க முன்வர வேண்டும். தங்கள் வாக்குகளின் வலிமையை திமுக அரசுக்கு உணர்த்துவதுதான் உண்மையான பதிலடியாக இருக்கும் என்று வாக்களிப்பதன் தேவை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இதனை அடுத்து மூன்று மாதங்களில் வேங்கை வயல் வழக்கில் புலன் விசாரணைகளை முடிப்போம் என காவல்துறை ஐக்கோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதனை ஐக்கோர்ட் தலைமை நீதிபதிகள் அமர்வு வலியுறுத்தி வேங்கை வயல் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணை கோரிய வழக்கை ஜூலை மூன்றாம் தேதிக்கு தள்ளி வைத்தனர். 

Similar News