தன் தொகுதிக்கு என்ன செய்தேன் என வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா..? ராகுலுக்கு சவால் விட்ட அண்ணாமலை..!

Update: 2024-04-24 10:42 GMT

நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில் இரண்டாம் கட்ட லோக்சபா தேர்தல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு வருகின்ற 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதோடு இன்றுடன் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முடிய உள்ள நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் பாஜக வேட்பாளர் சுரேந்திரனுக்கு ஆதரவாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்பொழுது, ராகுலை தோற்கடிக்க பாஜக வேட்பாளர் சுரேந்திரன் ஓட்டு கேட்டு வரவில்லை மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளார். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் வயநாடு தொகுதிக்கு மட்டும் என்ன செய்தேன் என்று ராகுல் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். 

மேலும் பத்து முறைக்கு குறைவாக ராகுல் வயநாடு தொகுதிக்கு வந்து மக்களை சந்தித்துள்ளார், ஆனால் தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் வருகிறார் இதன் மூலமே காங்கிரசின் மனநிலை என்ன என்பது தெளிவாகிறது என பேசினார். 

Source : Dinamalar 

Similar News