பயங்கரவாதிகளை பாதுகாக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் - ஆலப்புழாவில் அமித்ஷா பிரச்சாரம்..!
2024 லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது அதன்படி முதல் கட்டம் தமிழகம் உள்ளிட்ட புதுச்சேரி மாநிலங்களில் பரபரப்பாக நடந்து முடிந்த நிலையில் இன்னும் இரண்டு தினங்களில் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.
அதனை ஒட்டி கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி வைக்க மறுத்து விட்டது, ஆனால் கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றால் இந்தியாவின் அணு ஆயுதங்கள் அகற்றப்படும் என்று கூறியுள்ளது. ஆனால், இந்தியாவில் உள்ள அணு ஆயுதங்களை அகற்ற முடியாது! என்று பேசினார்.
மேலும், பாரதிய ஜனதா கட்சிக்கு ஒட்டு மொத்த கேரள மக்களும் ஓட்டளிக்க தயாராக உள்ளனர் விவசாயிகள் மற்றும் மீனவர்களும் பிரதமர் மோடிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளனர். கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியின் பொழுது பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர் பி எஃப் ஐ பயங்கரவாத அமைப்பிற்கு தடை விதித்தது பற்றி எந்த கருத்தையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவிக்காமல் மௌனம் காக்கிறது என்றும் தடை செய்யப்பட்ட அமைப்பான பி எஃப் ஐ அமைப்பிற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஆதரவளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
Source : Dinamalar