மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டில் காங்கிரசை வெற்றியடைய விடமாட்டேன் - கர்நாடகாவில் பிரதமர் பிரச்சாரம்..!

Update: 2024-04-29 12:01 GMT

வருகின்ற மே ஏழாம் தேதி கர்நாடகா, உத்திர பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் மூன்றாம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கர்நாடகாவில் பாலக்கோட்டில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியுள்ளார். 

அதில், வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டில் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கொண்டுவர திட்டமிட்டுள்ளது ஆனால் அதை நான் என்றும் நடக்க விட மாட்டேன், மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நமது அரசியலமைப்பு சாசனம் ஏற்கவில்லை. 

ஆனால் கர்நாடக அரசு ஓபிசி இட ஒதுக்கீட்டில் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளது, இதற்கான தீர்வை காங்கிரஸ் காண மாட்டார்கள் ஏற்கனவே அவர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையில் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார்கள். இதனை இந்த தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளார்கள்! 

ஆனால் இதில் காங்கிரசை வெற்றியடைய விடமாட்டேன் உங்கள் உரிமைகளை பாதுகாக்க உங்கள் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க மோடி எந்த எல்லைக்கும் செல்வார், போலியாக என் குரலில் தேர்தல் சமயங்களில் வீடியோக்களை உருவாக்கி வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

Source : The Hindu Tamil thisai 

Similar News