காங்கிரஸ் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.. பிரதமர் மோடி குற்றச்சாட்டு..
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட்டு பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றி இருக்கிறார். அந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசும் பொழுது, காங்கிரசிடம் நாட்டை ஒப்படைத்து விடாதீர்கள் என பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உங்களின் ஓட்டு மோடியை வலுப்படுத்தும். நாட்டை உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக உயர்த்தும். இந்தியாவை உற்பத்தி மையமாகவும், ஆற்றல் மையமாகவும் மாற்றுவதே எங்களின் குறிக்கோள். காங்கிரசிடம் நாட்டை ஒப்படைத்து விடாதீர்கள். ஏனெனில் சற்று சிந்தித்துப் பாருங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டு கூறியிருக்கிறார்.
ஹுப்பள்ளியில் எங்கள் மகள் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டபோது, மாநில அரசு ஓட்டு வங்கியை காப்பற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போது சுமார் 18000 கிராமங்களில் மின்சாரங்களை இல்லை. கோடிக்கணக்கானோர் இருளில் வாழ்ந்து இருக்கிறார்கள். குழந்தைகள் படிக்க மாட்டார்கள். ஆனால் பா.ஜ., ஆட்சியில் மின்சாரம் இல்லாத கிராமம் நாட்டிலேயே இல்லை. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படுகிறது.
கர்நாடகாவில் SC/ST சமூகத்தின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. பெரும்பாலான எஸ்சி, எஸ்டி, ஓபிசி எம்பிக்கள் பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள். போலியாக என் குரலில் வீடியோக்களை உருவாக்குகிறார்கள். இதற்காகத்தான் அவர்கள் பெரும்பாலான முயற்சியை போடுகிறார்கள் என்று குறிப்பிட்டு கூறுகிறார். கர்நாடக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நாட்கள் விரைவில் வரும். 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் வறுமையை ஒழிக்கவில்லை என அவர் பேசினார்.
Input & Image courtesy: News