இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள்.. மத்திய அரசு கொடுக்கும் முக்கியத்துவம்..

Update: 2024-05-09 16:21 GMT

உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்' குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு மற்றும் தொழில்துறை மாநாட்டை டி.ஆர்.டி.ஓ புதுதில்லியில் ஏற்பாடு செய்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஏற்பாடு செய்த 'உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்' குறித்த தேசியக் கருத்தரங்கு மற்றும் தொழில்துறை சந்திப்பை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கிரிதர் அரமானே இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். ஆயுதப்படைகள், கல்வியாளர்கள், தொழில்துறை மற்றும் டிஆர்டிஓ ஆகியவற்றின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி, உரையாடலை வளர்ப்பது, அறிவைப் பரிமாறிக்கொள்வது மற்றும் 'தற்சார்பு இந்தியா' என்ற பார்வைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்ள புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


பாதுகாப்புத் துறைச் செயலாளர் தமது உரையில், எதிர்கால சவால்களை சமாளிக்க ஒவ்வொரு துறையிலும் தன்னம்பிக்கையை அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தியா குறிப்பிடத்தக்க சதவீத இளைஞர்களைக் கொண்ட நாடு என்றும், தற்சார்பு அவர்களுக்கு பயனுள்ள வேலைவாய்ப்பை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார். பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை அடைவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய கிரிதர் அரமானே, புவிசார் அரசியலில் நம்பகமான போக்கு எதுவும் இல்லை என்றும், இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்காக மற்ற நாடுகளை நம்பியிருக்க முடியாது என்றும் கூறினார். 2047-ம் ஆண்டில் வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதையில் நாடு மிகப்பெரிய முன்னேற்றங்களை அடைய தற்சார்பு உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.


எல்லைகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதை எடுத்துரைத்த பாதுகாப்புத் துறைச் செயலாளர், எந்திரத்தை மேலும் வலுப் படுத்துவதில் உள்கட்டமைப்பு நிறுவனங்கள் பங்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆயுதப்படை வீரர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்படும் அதே வேளையில், எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு அமைப்பை வலுப்படுத்துவதில் தனியார் துறை பங்களிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். எல்லைப் பகுதிகளில் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் தங்குவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட துடிப்பான கிராமங்கள் திட்டம் பற்றி குறிப்பிட்ட அரமானே, தொலைதூரப் பகுதிகளில் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அந்தந்த அமைப்புகளுக்குள் ஒரு தனிப் பிரிவை உருவாக்குமாறு நிறுவனங்களை வலியுறுத்தினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News