உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி.. எளிமை தன்மையை பாராட்டும் சமூக வலைத்தளவாசிகள்..
தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிகாருக்கு சென்று இருக்கிறார். குறிப்பாக அங்கு புகழ் பெற்ற சீக்கியர்களின் புனித தளமாக விளங்கும் ஸ்ரீ தக்த் ஹர்மந்திர் பாட்னா சாஹிப் குருத்வாராவில், பக்தர்களுக்கு பிரதமர் மோடி உணவு பரிமாறினார். அங்கு சென்ற பிரதமர் காலை உணவு தயார் செய்யும் சமையலறைக்கு நேரடியாக சென்று, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சப்பாத்தி தயார் செய்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு வினியோகம் செய்தார்.
நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு 10வது சீக்கிய குரு பிறந்த இடத்தில் பாட்னா சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது. குரு கோவிந்த் சிங்கின் பிறப்பிடத்தைக் குறிக்கும் வகையில் 19 ஆம் நூற்றாண்டில் மகாராஜா ரஞ்சித் சிங் என்பவரால் தக்த்தின் கட்டுமானம் நியமிக்கப் பட்டது. இந்த இடத்திற்கு தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று பயணம் செய்து இருக்கிறார்.
தேர்தல் பிரசாரம் செய்ய இன்று பீஹாருக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் சாகித் குருத்துவாரில் பக்தர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய கைகளில் உணவு பரிமாறிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி இருக்கிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் எளிமை தன்மையை பார்த்து பல்வேறு மக்கள் அதை பகிர்ந்து வருகிறார்கள்.
Input & Image courtesy: News