மாநில பாடத்திட்டத்தில் நிறைந்திருக்கும் திராவிட தலைவர் மற்றும் இயக்க வரலாறு! வேதனை தெரிவித்த தமிழக ஆளுநர்!

Update: 2024-05-28 17:15 GMT

நேற்று மாலை நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மூன்றாம் ஆண்டு மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்றது. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவில் கல்வியில் தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அதனால் தொலைநோக்கு பார்வையோடு பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்றும், பல்கலைக்கழகங்களை மேம்படுத்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார். 

மேலும், உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு என எதை படிக்க வேண்டும் என்பது குறித்த போதுமான விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் இல்லை என்றும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லூரி மாணவர்கள் கிராமங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். இதுதான் கல்லூரி மாணவர்கள் செய்ய வேண்டிய வேலையா? 

மாநில பாடத்திட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலுநாச்சியார் போன்ற ஒரு சில சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு மட்டுமே உள்ளது. தமிழகத்தில் பிற சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் இயக்கங்கள் குறித்த வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தலித் தலைவர்கள் பற்றிய வரலாறுகளும் அதிக அளவில் இல்லை. ஆனால் திராவிட தலைவர்கள் மற்றும் இயக்க வரலாறே நிறைந்துள்ளது! வரலாற்றை மறைப்பது அவமதிப்பதாகும் என்று கூறியுள்ளார். 

Source : Dinamalar 

Tags:    

Similar News