நேரு, இந்திரா காந்தி ஆகியோரை முந்துகிறாரா நரேந்திர மோடி?

Update: 2024-05-31 10:17 GMT

இன்றுடன் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவு பெறுகிறது. இதனை அடுத்து ஜூன் நான்காம் தேதிக்காக ஒட்டுமொத்த நாடே காத்துக் கொண்டிருக்கிற நிலையில், மன்மோகன் சிங்கை விட நரேந்திர மோடி அதிக காலம் பிரதமராக பதவி வகித்து, நம் நாட்டின் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். 

அதாவது அதிக காலம் இந்திய நாட்டில் பிரதமராக பதவி வகித்தவர்கள் பட்டியலில் நேரு 16 ஆண்டுகள் 286 நாட்கள் பதவி வகித்து முதலிடத்தில் உள்ளார். அதற்குப் பிறகு 15 ஆண்டுகள் 350 நாட்கள் பதவி வகித்து இந்திரா காந்தி இரண்டாவது இடத்திலும், 10 ஆண்டுகள் நான்கு நாட்கள் பிரதமராக பொறுப்பில் இருந்து மன்மோகன் சிங் மூன்றாவது இடத்திலும் இருந்தனர். 

ஆனால் கடந்த 2014 மே 26 பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று நாளை (மே 31) உடன் பத்து ஆண்டுகள் 5 நாட்களை நிறைவு செய்கிறார். அதனால் நான்காம் இடத்தில் இருந்த பிரதமர் மூன்றாவது இடத்தில் இருந்த மன்மோகன் சிங்கை முந்தி, தற்பொழுது அதிக நாட்கள் பிரதமராக பதவி வகித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். 

மேலும், மூன்றாவது முறையும் மோடி பிரதமராகி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள நேரு, இந்திரா காந்தியை முந்துவார் என அரசியல் அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

Tags:    

Similar News