அரசு பேருந்தில் கழன்று ஓடிய முன் சக்கரம்! அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்..!

Update: 2024-06-03 15:45 GMT

சமீப நாட்களாகவே தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் அனைத்திலும் பல கோளாறுகள் மற்றும் பிரச்சனைகள் இருக்கும் செய்திகள் வெளியாகிக் கொண்டு வருகிறது. ஏனென்றால் அரசு போக்குவரத்து கழகத்தின் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் நிதி பற்றாக்குறையில் திண்டாடி வருகிறது. இதனால் அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்கவும், போக்குவரத்துக் கழகத்தில் உள்ள பணியாளர்களின் பற்றாக்குறையை போக்கவும் முடியாத நிலை நீடித்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் அனைத்து பேருந்துகளும் ஆய்வு செய்யப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பழனி அருகே அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து ஒன்று சென்று கொண்டிருக்கும் போது பேருந்தின் முன் சக்கரம் கழன்று கழிவு நீர் ஓடையில் விழுந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் இன்றி தப்பித்துள்ளனர். 


திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை வேப்பன்வலசிற்கு 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் முன் இடதுபுற சக்கரம் கழன்று அருகில் இருந்த பெரிய கழிவு நீர் ஓடையில் விழுந்தது. பேருந்து ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே சக்கரம் கழன்றதால் பேருந்து நிலை தடுமாறியது. இதனால் பயணிகள் அனைவரும் பயத்தில் கூச்சலிட்டு அலறினர். ஆனால் ஓட்டுநர் சற்று சுதாரித்துக் கொண்டு பேருந்தை நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தப்பியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Source : Asianet news Tamil 

Tags:    

Similar News