உலக நாடுகள் உற்று நோக்கிய லோக்சபா தேர்தல் முடிவு.. மோடியை வாழ்த்திய உலக தலைவர்கள்..
இந்தியாவில் நடைபெற்ற 18-வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி வாழ்த்து தெரிவித்த உலகநாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். சமூக ஊடக 'எக்ஸ்' தளத்தில் மோடி உலக நாடுகளின் தலைவர்கள் அனுப்பிய செய்திகளுக்கு பதிலளித்துள்ளார். மொரீஷியஸ் குடியரசின் பிரதமர் பிரவிந்த் குமார் ஜூக்நாத் வெளியிட்டுள்ள பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது, "பிரதமர் பிரவிந்த் குமார் ஜூக்நாத் அவர்களின் மனமார்ந்த செய்திக்கு நன்றி. நமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை, சாகர் தொலைநோக்கு, உலகளாவிய தெற்கிற்கான நமது உறுதிப்பாடு ஆகியவற்றில் மொரீஷியஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது சிறப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்.
பூடான் பிரதமர் செரிங் டோப்கே வெளியிட்டுள்ள பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது, "எனது நண்பரான, பிரதமர் செரிங் டோப்கே ஆகிய உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. பாரத்-பூடான் நட்புறவுகள் தொடர்ந்து வலுப்பெறும்". நேபாள பிரதமர் காம்ராட் பிரசந்தா வெளியிட்டுள்ள பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது, "பிரதமர் காம்ராட் பிரசந்தா, உங்களது அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியா-நேபாள நட்புறவை வலுப்படுத்த தொடர்ந்து ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன்". இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ள பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது "நன்றி ரணில் விக்ரமசிங்கே. இந்தியா, இலங்கை இடையேயான பொருளாதார நட்புறவில் தொடர்ச்சியான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்கியுள்ளேன்.
இலங்கையின் அதிபர் மஹிந்த ராஜபக்சே வெளியிட்டுள்ள பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது, "எனது நண்பரான மஹிந்த ராஜபக்சே உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியா-இலங்கை இடையேயான புதிய அத்தியாயத்திற்கு உங்கள் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்க்கிறேன். இத்தாலி பிரதமர் தஜார்ஜியா மெலோனி, மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸு மேலும் பல உலக தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்து செய்திகளை தெரிவித்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News