இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் - கனடா பிரதமர்!

Update: 2024-06-06 13:10 GMT

கடந்த ஆண்டு கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக கூறினார். அதனைத் தொடர்ந்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி வெளியேறுமாறு கனடா உத்தரவிட்டது. 

கனடாவின் இந்த அதிரடி உத்தரவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா, இந்தியாவில் உள்ள கனடா தூதரை வெளியேறச் சொல்லியது. அதே சமயத்தில் கனடாவை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுக்கும் நடைமுறையையும் நிறுத்தி வைத்தது. மேலும் கனடா பிரதமர் ஜஸ்டின் கனடா நாட்டின் ஜனநாயகத்திற்கு இந்தியா அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்தார். 

இந்த நிலையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பத்தாண்டுகளின் ஆட்சியை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தக்க வைத்த தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஜஸ்டின். அதாவது தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துக்கள். கனடா - இந்தியா இரு நாடுகளையும் சேர்ந்த மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களது அரசுடன் இணைந்து செயல்பட கனடா தயாராக உள்ளது என்று கூறியுள்ளார். 

Source : The Hindu Tamil thisai 

Tags:    

Similar News