தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை உயர்த்திய பாஜக.... பெருமிதத்தில் பிரதமர்...!

Update: 2024-06-08 12:47 GMT

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டமாக நடந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் நான்காம் தேதி வெளியானது. கடந்த இரண்டு தேர்தல்களை போல பாஜக இந்த முறையும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பாஜகவால் ஒரு எம்பியை கூட பெற முடியவில்லை. முன்னதாக தேர்தல் அறிவிப்புகளுக்கு பிறகும், பிரச்சாரத்தின் பொழுதும், தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளது என பல அரசியல் விமர்சகர்கள் கூறும் செய்திகள் வெளியானது.

ஆனால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும் 2019 மற்றும் 2021 தேர்தல்களோடு ஒப்பிடும் பொழுது பாஜக எந்த திராவிட கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துக் கொள்ளாமல் தனி கட்சியாக தேர்தலை எதிர்கொண்டு பல தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 

இதனால் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு நிகரான அடுத்த ஒரு பெரிய கட்சியாக பாஜக தன் வாக்கு சதவிகிதத்தை அதிகரித்துள்ளது. மேலும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், நோட்டா கட்சி, நோட்டாவிற்கு விழும் வாக்குகளை கூட பெறாத கட்சி என கூறிக் வந்தவர்களுக்கு இன்று பதிலடி கிடைத்திருக்கும். 2026 தான் அடுத்து நம் இலக்கு என பேசி இருந்தார். 

இந்த நிலையில் மூன்றாம் முறையாக வெற்றி பெற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜகவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு இவ்வளவு தொகுதிகளில் போட்டியிட முடியாது என்பது எங்களின் பலருக்கு தெரியும். ஆனாலும் நாங்கள் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் அளவிற்கு அதிக அளவிலான வேட்பாளர்களும் இல்லை.

ஆனால் அங்கு அவர்கள் வெற்றி பெற கடினமாக உழைத்தனர். மிகவும் கடினமாக உழைத்தனர். அதனால் தான் அங்கு நாங்கள் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை என்றாலும், மிகவும் வேகமாக நமது வாக்கு சதவிகிதத்தை அதிகரித்துள்ளோம். எதிர்காலத்தில் நமக்கு என்ன காத்திருக்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது என பேசி உள்ளார்.

Tags:    

Similar News