மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக் கொண்ட நரேந்திர மோடி

Update: 2024-06-09 16:30 GMT

2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தலை தொடர்ந்து 2024 லிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். இதற்காக இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரதமர் மோடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

பிரதமர் பதவியேற்றவதை தொடர்ந்து, ராஜ்நாத் சிங் இரண்டாவதாக பதவி ஏற்றார். அவரை தொடர்ந்து அமித்ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், மனோகர்லால் கட்டார், குமாரசாமி, பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட 21 பேர் பதவியேற்றனர். 

மேலும் பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், செஷல்ஸ் அதிபர் வேவல் ராம்கலவன், பூடான பிரதமர் ஷெரீன் டோப்கே ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்களும் இதில் கலந்து கொண்டதோடு, பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அக்ஷய் குமார், தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபு, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

Source : Dinamalar 

Tags:    

Similar News