'மோடி எனக்குக் கடவுள் போன்றவர்'- மோடிக்கு மூன்று கிலோ வெள்ளி தாமரை பரிசுடன் காத்திருக்கும் காஷ்மீரைச் சேர்ந்த அன்பான தொண்டர்!
மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றத்தை தொடர்ந்து அவருக்கு மூன்று கிலோ வெள்ளி தாமரை பரிசை காஷ்மீரை சேர்ந்த ஒரு தொண்டர் தயாரித்து வைத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மோடி மூன்றாவது முறையாக பிரதமராக நேற்று பதவியேற்றார். இதை ஒட்டி காஷ்மீரைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மோடிக்கு பரிசாக வழங்குவதற்காக மூன்று கிலோ வெள்ளியைக் கொண்டு தாமரை மலரை வடிவமைத்துள்ளார் .
ஜம்மு நகரில் உள்ள முத்தி கிராமத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான ரிங்கு சவுகான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்காகவும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவை ரத்து செய்வதற்காகவும் மோடிக்கு இந்த தனித்துவமான பரிசை வழங்க வேண்டும் என்ற எண்ணம் தனது மனதில் தோன்றியதாக தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில் "எங்கள் அன்பான பிரதமருக்கு இந்த பரிசை தயார் செய்ய எனக்கு 15 முதல் 20 நாட்கள் ஆனது.
நான் தனிப்பட்ட முறையில் வெள்ளியில் தாமரை மலரை வடிவமைத்துள்ளேன். என் ஆன்மா அதில் உள்ளது .மோடி எனக்கு கடவுள் போன்றவர். அவர் இந்த பரிசை விரும்புவார் என நம்புகிறேன்" என்றார். இந்த பரிசை வழங்க பிரதமரை சந்திக்கும் வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருப்பதாக ரிங்கு சவுகானின் மனைவி அஞ்சலி தெரிவித்தார். இளைஞர் பிரிவான பா.ஜ.க யுவ மோர்ச்சா அமைப்பின் செய்தி தொடர்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
SOURCE :DAILY THANTHI